-
மைக்கோ பக்ரீரியம் (Mycobacterium tuberculosis)
-
பக்ரீரியாவினால் ஏற்படும் தொற்று நோய்.
-
இது ஒரு பரம்பரை நோயல்ல.
-
Tuberculosis
(TB) எனப்படும் இந் நோய் காற்றின் மூலம் பரவுகின்றது.
-
சுவாசத்தின் மூலம் தொற்றும் இந் நோய்க்கிருமி
பெரும்பாலும் சுவாசப்பையில் நோயை ஏற்படுத்துகிறது.
-
உலகில் 1/3 பங்கினர் காசநோய்க்கிருமித்தொற்றுக்கு
ஆளாகியுள்ளனர்.
-
காசநோய்க்கிருமித் தொற்றுக்குள்ளான அனைவருக்கும்
காசநோய் ஏற்படுவதில்லை.
-
ஒருவரது நோயெதிர்ப்பு சக்தி குறைவடையும்
சந்தர்ப்பத்திலேயே அவருக்கு காசநோய் ஏற்படுகிறது.
அறிகுறிகள்
|
 |
 |
 |
 |
இருமல்
|
இரவில் மெல்லிய காய்ச்சல்
|
சளியுடன் இரத்தம் வெளியேறல்
|
உடல் நிறை குறைதல்
|
 |
 |
 |
நிணநீர் கணுக்கள் வீங்குதல், நெஞ்சுவலி போன்ற
நோய்றிகுறிகளும் காணப்படும்
|
உணவில் விருப்பமின்மை
|
இரவு நேரத்தில் வியர்த்தல்
|
களைப்பாக இருத்தல்
|
|
|

இலங்கையில் ஆண்டுதோறும் ஒரு இலட்சம் மக்களில் 54 பேர்
காசநோயால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 25 பேர் சளியில் கிருமி உள்ள
காசநோயாளிகள்.
ஆண்டுதோறும் 9000 காசநோளாளர் சிகிச்சை பெறுகின்றனர். இதில் 4500 பேர்
சளியில் கிருமி உள்ள காசநோயாளிகள்.
இலங்கையில்
காசநோயாளிகள் அதிக அளவில் நெருக்கமான நகரங்களில் உள்ளனர்.
கிராமப்புறங்களில் சளிப்பரிசோதனை செய்யும் வசதிகள் குறைவு என்பதால்
காசநோயாளர் இனம் காணப்படல் குறைவாக உள்ளது
காசநோயினால்
பாதிக்கப்படக்கூடியவர்கள்
காசநோயாளிகளுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்.போசாக்கு குறைபாடு
உடையோர்.நெருங்கிய இடங்களில் வாழ்பவர்கள். காற்றோட்டம், சூரியஒளி குறைந்த
இடங்களில் வாழ்பவர்கள்.
எயிட்ஸ் நோய், சலரோகம், புற்று நோயுடையோர். மதுபானம், போதைப்பொருள்
பாவிப்போர்.
புகைப்பிடிப்பவர்கள்.
|