முகப்புப்பக்கம் புள்ளிவிபரங்கள் |  செயற்திட்டங்கள் | வெளியீடுகள் | விவரணச்சித்திரங்கள | தொடுப்புகள் | எம்மைப்பற்றி |  தொடர்புகளுக்கு |

காசநோய்
காசநோய் என்றால் என்ன?
காசநோய் அறிகுறிகள்
பரவும் விதம்
காசநோய் வந்தால்.?
காசநோய் வராதிருக்க
காசநோயும் கர்ப்பிணிகளும்
காசநோயும் போசாக்கும்
டொட் என்றால்?
பதிவிறக்கம்
 சமூகத்தொண்டர் வழிகாட்டி
ஓடியோ பாடல்கள்(எம்பி3)
விவரணங்கள்(பவர்பொயின்ற்)
வெளியீடுகள்

காசத்தினை நிறுத்தும் உத்தி
-வைத்தியகலாநிதி சி.யமுனானந்தா

காசநலவிந்தை(கார்ட்டூன் கதை)
-வைத்தியகலாநிதி சி.யமுனானந்தா

  நடைமுறை காசநோய் கட்டுப்பாடு
-வைத்தியகலாநிதி சி.யமுனானந்தா

கட்டுரைகள் மற்றும் விவரணங்கள்
பத்திரிகையில் வெளிவந்தவை
பரிசு பெற்றவைகள்
கவிதைகள்
செய்திகள் நிகழ்வுகள்
போட்டிகளில் பரிசு பெற்றவர்கள்
நிழல்படங்கள்

 

 

 

  உலக காசநோய் தினம் 2009 | கட்டுரை
கவிதைகள்
நடையிடு நடையிடு நானிலத்தில் காசம் களையவே! -DR.சி.யமுனானந்தா.

நடையிடு நடையிடு நானிலத்தில் காசம் களையவே
தடையிடு தடையிடு தரணியில் காசம் பரவலை
படையெடு படையெடு பாரினில் காசம் அழியவே
எடைகொடு எடைகொடு காச நோய்தனிற்கு
விடைகொடு விடைகொடு விசும்பினில் காசத்திற்கு.

மெலிந்து மெலிந்த உடல் உருகிடினும்
வெந்து வெந்து உடல் வாடினினும்
இருமி இருமி இடருடன் இராது இன்றே
கருமமே கருமமாக சளியினை சோதித்து
அருந்தி அருந்தி அருமருந்ததனால்
வருந்தி வருந்தி வாட்டும் காசம் அழிந்திடுமே

பாராமுகமாய் இருந்திடாது ஐயுறுதனில்
ஒருமுகமாய் நாடிடுவீர் வைத்தியரை
சுமூகமாய் ஆறுதிங்கள் ஒளடதம் நோக்கச் சௌக்கியம்
சமூகமாய் ஏறு மங்கள ஒளடதம் நோக்கச்; சௌபாக்கியம்

அன்பான அரவணைப்புண்டு காசம் மீது
கண்ணான கரிசனையுண்டு காசம் மீது
பண்பான பராமரிப்புண்டு காசம் மீது
பொன்னான மருந்துகளுண்டு காசத்திற்கு.

பயில் வீரனின் பாய்ச்சல் காசத்திற்கு
அயில் விழியாள் நாட்டம் காசத்திற்கு
மயில் தோகையாள் ஆட்டம் காசத்திற்;கு
குயில் மொழியாள் கீதம் காசத்திற்கு

சடசடவெனவே சாடும் வேகம்
படபடவெனவே படியும் பாடம்
மடமடவெனவே மடியும் மாடம்
கடகடவெனவே கலையும் காசம்.

 

காப்புரிமை யாவும் வடஇலங்கை காசநோய் தடுப்பு சங்கத்திற்குரியது 2009-2013.   இணையத்தளவடிவமைப்பு மற்றும் சேவர் வசதி SPEED IT NET