முகப்புப்பக்கம் புள்ளிவிபரங்கள் |  செயற்திட்டங்கள் | வெளியீடுகள் | விவரணச்சித்திரங்கள | தொடுப்புகள் | எம்மைப்பற்றி |  தொடர்புகளுக்கு |

காசநோய்
காசநோய் என்றால் என்ன?
காசநோய் அறிகுறிகள்
பரவும் விதம்
காசநோய் வந்தால்.?
காசநோய் வராதிருக்க
காசநோயும் கர்ப்பிணிகளும்
காசநோயும் போசாக்கும்
டொட் என்றால்?
பதிவிறக்கம்
 சமூகத்தொண்டர் வழிகாட்டி
ஓடியோ பாடல்கள்(எம்பி3)
விவரணங்கள்(பவர்பொயின்ற்)
வெளியீடுகள்

காசத்தினை நிறுத்தும் உத்தி
-வைத்தியகலாநிதி சி.யமுனானந்தா

காசநலவிந்தை(கார்ட்டூன் கதை)
-வைத்தியகலாநிதி சி.யமுனானந்தா

  நடைமுறை காசநோய் கட்டுப்பாடு
-வைத்தியகலாநிதி சி.யமுனானந்தா

கட்டுரைகள் மற்றும் விவரணங்கள்
பத்திரிகையில் வெளிவந்தவை
பரிசு பெற்றவைகள்
கவிதைகள்
செய்திகள் நிகழ்வுகள்
போட்டிகளில் பரிசு பெற்றவர்கள்
நிழல்படங்கள்

 

 

 

  உலக காசநோய் தினம் 2009 | கட்டுரை
கவிதைகள்
நான் காசநோயினை நிறுத்துகிறேன்.

காசம் பரவுவது காற்றால் - பல
தேசம் எங்கும் இறக்கின்றன உயிர்களிதனால்
பேச மறந்து இன்று நானிருந்தால்
வாசமிழந்த வாழ்வெமக்கு.

காலையில் இருந்து இருமல் - பின்
மாலையில் வருவதோ காய்ச்சல்
சேலைதனை அணியவொண்ணா உடல்மெலிவு
வேலைதனைச் செய்யவொண்ணா உடல்களைப்பு.

உணவில் நாட்டம் இன்றி
உடல்உருகியே மெலிந்து சென்று
உதிரமும் சளியும் இருமலுடன் வரும் வேளை
உடன் வைத்தியரை அணுகு.

நோய் வரும் தன்மைதனை அறிந்தால்
வாய்தனில் மெல்ல நல் மருந்து
தாய் தரும் பாலிலும் இனிதென
நாயிலும் மிக்க நன்றியுடன் மெல்வாய்.

ஆறுதிங்கள் மருந்துதனை நீ
அனுதினமும் அருந்தியே வந்தால்
வீறு கொண்டு உன்னுடல் - புத்துயிர்
பேறுபெற்று வாழ்வாய்.

வாழுமிடத்தில் செம்மையான காற்றோட்டம் இருத்தல் நலம்
தாழிடும் கதவு வழியே சூரிய உளி ஓட்டம் இருத்தல் நலம்
வருமுன் காக்கும் வழிகள் சாலவே இருத்தல் நலம்
தெருமுன் இருக்கும் தடைகளை அகற்றல் நலம்.

கண்ட கண்ட இடம் தனில் துப்பாவிட்டால்
தண்டம் வராது காசமதனால்
போசணை மிக்க உணவுதனை உண்டால்
வேதனை மிக்க காசம் உனை அணுகினும் அணுகல் கடினம்.

காசமற்ற தேசம் என்றும் நாம்
நேசமுடன் வாழ இன்றே
வேசமின்றி உழைப்போம் - பாரில்
நீசம் நீங்கி அறவே
கேச வேறுபாடு இன்றியே

புறம் தள்ளும் வாழ்வுதனை – காசம் மேல்
சிரம் தனில் மேற்கொள்ளாதே – உண்டு
வரம் தரும் மருந்துகளால் - பூரண சுகவாழ்வு
கரம்தனில் இதனைக் கருதியே கடி.

காசினியில் காசம் களைந்திடவே
போதினியில் விழிப்பு விளைந்திடவே – அதன்
அக்கினியில் அழிப்போம் காசமதனை – அதனால்
வேதனையில் வாழ்வு திளைத்திடுமே.

கொல்லும் நோய்தனை வெல்வோம் - அவச்
சொல்லும் பொருளும் இனி வேண்டா
நில்லும் நில்லும் எனக்காசத்தை நிறுத்த
அல்லும் பகலும் அயராது தோல் கொடுப்போம்.

அரிய கடமையினைப் புரிவேன் - நான்
உரிய சிகிச்சையினை எடுப்பேன் - காசநோயாளியானால்
சீரிய சேவையினைத் தொடுப்பேன் - சுகாதார சேவையினனாய்
நேரிய வழிகாட்டியாகித் தடுப்பேன் காசத்தை சமூகத்தவனாய்

நிறுத்துகின்றேன் காசத்தை நான் - அதுவே தொனியாய்
ஒறுத்து நீயும் எம்மில் இணைந்தால்
வெறுத்து ஒதுக்கிய வாழ்வு மலரும்
அறுத்து விடுவோம் காச விலங்கினை.

கைகொடுப்பீர் கொடுப்பீர் - காசம் களையவே
வழி காட்டுவீர் காட்டிடுவீர் - உரிய சிகிச்சைக்கு
கழியும் காசமதன் ஊழியிலேயே
அழியும் காசமதனால் வாழியவே.


DR. சி. யமுனானந்தா
மாவட்டக் காசநோய்க் கட்டுப்பாட்டு அதிகாரி,
மார்புநோய் சிகிச்சை நிலையம்,
யாழ்ப்பாணம்.

காப்புரிமை யாவும் வடஇலங்கை காசநோய் தடுப்பு சங்கத்திற்குரியது 2009-2013.   இணையத்தளவடிவமைப்பு மற்றும் சேவர் வசதி SPEED IT NET