முகப்புப்பக்கம் புள்ளிவிபரங்கள் |  செயற்திட்டங்கள் | வெளியீடுகள் | விவரணச்சித்திரங்கள | தொடுப்புகள் | எம்மைப்பற்றி |  தொடர்புகளுக்கு |

காசநோய்
காசநோய் என்றால் என்ன?
காசநோய் அறிகுறிகள்
பரவும் விதம்
காசநோய் வந்தால்.?
காசநோய் வராதிருக்க
காசநோயும் கர்ப்பிணிகளும்
காசநோயும் போசாக்கும்
டொட் என்றால்?
பதிவிறக்கம்
 சமூகத்தொண்டர் வழிகாட்டி
ஓடியோ பாடல்கள்(எம்பி3)
விவரணங்கள்(பவர்பொயின்ற்)
வெளியீடுகள்

காசத்தினை நிறுத்தும் உத்தி
-வைத்தியகலாநிதி சி.யமுனானந்தா

காசநலவிந்தை(கார்ட்டூன் கதை)
-வைத்தியகலாநிதி சி.யமுனானந்தா

  நடைமுறை காசநோய் கட்டுப்பாடு
-வைத்தியகலாநிதி சி.யமுனானந்தா

கட்டுரைகள் மற்றும் விவரணங்கள்
பத்திரிகையில் வெளிவந்தவை
பரிசு பெற்றவைகள்
கவிதைகள்
செய்திகள் நிகழ்வுகள்
போட்டிகளில் பரிசு பெற்றவர்கள்
நிழல்படங்கள்

 

 

 

  காசமில்லை உலகில் அதற்கு தடைகளை ம

காசமில்லை உலகில் அதற்கு தடைகளை மாற்றிடக் காண்பீர்!
 

அந்தி நேரக்காய்ச்சல் தானும் ஆளை உருக்கும் உடல் மெலிவு தானும் சிந்தி
அவதானம் தேவை இப்போ எமக்கு என்றும் நிதானமே
இருமலுடன் காய்ச்சல் உற்று உணவு விருப்பு இழந்தே
இரு கிழமைகளிற்கு மேல் தொடரின் உடனே ஒரு
உரிமையொடு வைத்தியரை நாடிடுவீர் - உறவுகளே
உடன் சளிப்பரிசோதனை தனைக் கேளீர் - உதவும்
எளிமையான பரிசோதனை காண்பீர் - எங்கும்
எடுத்தியம்பும் காசநோய் தொற்றுதனை வடுவின்றியே
ஐயம்இன்றியே மருந்ததனால் நலன் காண்பீர் - தயவுடன்
ஐந்து பேரிடம் விழிப்பினை எடுத்தியம்பியே இன்றே முந்து
ஒன்றுபட்டுத் தடைகளை உடைத்தே காசத்தை வென்று
ஒழிந்திடும் எனும் விடையினை உடையோராய் வாழி

நம் பரம்பரையினரைத் தாக்கிய காசம்
எம் பரம்பரை நோய் அல்லவே அல்ல கேளீர்
காசம் குடும்பத்தில் காணில் அது
காற்றாலே தொற்றும் தகையது கேளீர்
இனிமையான மருந்துகளால் உடனே அழியும் - எனவே
தனிமையான வாழ்வு இல்லை காசத்திற்கு கேளீர்

பால் வினை நோயுடையோருக்கு காசம்
மேல் வினை புரியும் கேளீர்
நீரிழிவு நோயுடையோர்க்கு காசம்
நேரழிவு புரியும் கேளீர்
புகை போதை மது நுகரக் காசம்
மிகை உபாதையது பகரக் கேளீர்
எவரெதிலும் இருமுதல் ஆகாது காண்பீர்
எங்கெங்கெல்லாம் துப்புதல் ஆகாது காண்பீர்
காற்றோட்டமுள்ள இடத்தில் வாழுதல் நலன் காண்பீர்
சூரியக்கதிர் பட வாழ நலன் காண்பீர்
போசணை உணவு உண்ணக் காண்பீர்
நோயறிகுறி உடையோரைப் பரிசோதிக்கக் காண்பீர்
நோயுற்றோருக்கு உதவுதல் காண்பீர்
மருந்துகளை இடையில் கைவிடலாகாது காண்பீர்
உற்றாரையும் சுற்றாரையும் சோதித்தல் காண்பீர்
காசநோயினை விரட்டும் வழிகள் காண்பீர்
காசம் இல்லை இல்லை உலகில் என்றிடக் காண்பீர்
அதற்கு இன்றே விழித்து தடைகளை மாற்றிடக் காண்பீர்


 

Dr.C.S.  யமுனானந்தா MBBS, DTCD
மாவட்ட காசநோய் கட்டுப்பாட்டு அதிகாரி,
மார்பு நோய் சிகிச்சை நிலையம்,
யாழ்ப்பாணம்.

காப்புரிமை யாவும் வடஇலங்கை காசநோய் தடுப்பு சங்கத்திற்குரியது 2009-2013.   இணையத்தளவடிவமைப்பு மற்றும் சேவர் வசதி SPEED IT NET