குறுகியகால நேரடிக்
கண்காணிப்பிலான சிகிச்சை (DOTS)
மருந்துகளை ஒழுங்காக உள்ளெடுப்பதற்கு அறிமுகப்படுத்தப்பட்ட
எளியதொரு முறையாகும்.
இம்முறையில் நோயாளி தன் வீட்டிற்கு மிக அருகில் உள்ள சிகிச்சை
நிலையத்திற்கு தினமும் சென்று அங்கு உள்ள சுகாதார உத்தியோகத்தர்
முன்னிலையில் மருந்துகளை உள்ளெடுப்பார். தினமும் குளிசைகள்
உள்ளெடுப்பது பதிவட்டையில் அடையாளப்படுத்தப்படும். நோயாளி
சிகிச்சைக்கு சமூகமளிக்காத பட்சத்தில் உடனடியாக மீளவும்
சிகிச்சைக்கு வர நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
காசநோய் தொடர்பான சமூகவடு
நோய்
பற்றிய அறியாமையே சமூகவடுவிற்கான பிரதான காரணம்.
காசநோயினை முற்றாக்கக் குணப்படுத்தலாம்.
காசநோய் ஒரு பரம்பரை நோயல்ல என்பதை அறிதல் வேண்டும்.
மருந்துகள் எடுப்பதால் நோய் தொற்றும் தன்மை இரண்டு கிழமைகளில்
முற்றாக இல்லாது போகும். தொடர்ச்சியாக 3 கிழமைகளுக்கு
மேல் இருமல் இருப்போர் சளிப்பரிசோதனைக்கு முன்வரல் வேண்டும்.
|