காசநோய்க்கிருமிகளைக்
கண்டறியும் முறைகள்
1.சளிப்பரிசோதனை
யாராவது ஒருவர் 3 கிழமைகளுக்கு மேல் இருமல் உடையவராயின்
சளியினைப் பரிசோதனை செய்தல் வேண்டும். நோயாளி வந்தவுடன் ஒரு
மாதிரியும் அடுத்தநாள் அதிகாலை மறு மாதிரியும் வைத்தியசாலையில்
மறு மாதிரியும் சளிப்பரிசோதனை செய்யப்படும்.சளியில் 105/ml என
கிருமிகள் காணப்படின் மட்டுமே நுணுக்கு காட்டியினால் கண்டு
பிடிக்க முடியும்.
2. ஏனைய
முறைகள்
1.வளர்ப்பு ஊடகங்களில் சளியினை இட்டு காசநோய்க் கிருமிகளின்
பெருக்கத்தினை அவதானித்தல்.
2. தோற் சோதனை (மாண்டு பரிசோதனை)
3. CXR நெஞ்சு எக்ஸ்கதிர்படம்
4. ஞரயவெகைநசழn வநளவ இரத்தப்பரிசோதனை
காசநோய்க்கான சிகிச்சை
சிகிச்சை
அளிப்பதன் நோக்கங்கள்
காசநோயாளியை
பூரணமாகக் குணமாக்குதல்.
காசநோயாளியை இறப்பிலிருந்தும், பின்விளைவுகளிலிருந்தும்
பாதுகாத்தல்.
சமூகத்திற்கு நோய் பரவலைத்தடுத்தல்
காச நோய் மீள ஏற்படுவதைத் தடுத்தல்.
காசநோய்க்கிருமிகள் மருந்துக்கு எதிர்ப்புத் தன்மை பெறுவதைத்
தடுத்தல்.
இவை குறுகிய காலத்துக்கு (பொதுவாக 6 மாதங்களுக்கு) ஒழுங்காக
பூரணமாக மருந்தை உட்கொள்ளச் செய்வதன் மூலம் அடையப்
படுகிறது.இலங்கையின் எல்லாப் பாகங்களிலும் உள்ள அரசாங்க
வைத்தியசாலைகளிலும், மார்பு நோய் சிகிச்சை நிலையங்களிலும்
காசநோய்க்கான சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது.
காசநோய்க்கான சிகிச்சை
வகை -1
ஆரம்பத்தில் கண்டறியப்படும் நோயாளிகளுக்கு
அளிக்கப்படும்சிகிச்சை.
1)ஆரம்ப அவத்தை (Intensive Phase)
இக் காலப்பகுதியில் நோய்க்கிருமிகள் விரைவாகக் கொல்லப்படும்.
நோயாளி எறத்தாழ இரண்டு வாரங்களில் ஏனையோருக்கு தொற்றை
ஏற்படுத்த முடியாத நிலைக்கு மாற்றப்படுவதுடன் நோய்க்கான
அறிகுறிகளும் குணமடையும்.
இச் சிகிச்சையின் போது பின்வரும் மருந்துகள் இரண்டு
மாதங்களுக்கு வழங்கப்படும்.
றைபம்பிசின் (Rifampicin)
ஐசோனியாசிட் ( Isoniazid)
பைறசினமைட் (Pyrazinamide)
எதம்பியுட்டோல் (Etambutol)
2)Continuation phase
தற்போது நான்கு வில்லைகளும் ஒன்றாக்கப்பட்ட தனி வில்லையாக
உள்ளது.தொடர் அவத்தைஇக்காலப் பகுதியில் உடலில் எஞ்சியுள்ள
கிருமிகள் அழிக்கப்படும். றைபாம்பிசின், ஐசோனியாசிட் என்பன
நான்கு மாதங்களுக்கு வழங்கப்படும்.
காசநோய்க்கான சிகிச்சை
வகை -2
இச் சிகிச்சை மீளவும் காசநோய் வருபவர்களுக்கும், வகை 1 சிகிச்சை
பயனளிகாதோருக்கும் சிகிச்சையினை முறையாகப் பெறாதோருக்கும்
வழங்கப்படும்.
இதன்போது ஆரம்ப அவத்தையின் நான்கு மருந்துகளுடன் ஸ்ரெப்ரோமைசின்
(Streptomycin) எனப்படும் ஊசியும்
முதல் இரண்டு மாதங்களுக்கு வழங்கப்படும்.அடுத்த ஒரு மாதத்திற்கு
நான்கு மருந்துகள் வழங்கப்படும்.
இறுதி ஐந்து மாதங்களுக்கு தொடர் அவத்தையின் இரண்டு
மருந்துகளுடன் எதம்பியுட்டோல் வழங்கப்படும்.மொத்தமாக எட்டு
மாதங்களுக்கு சிகிச்சை வழங்கப்படும். |