முகப்புப்பக்கம் புள்ளிவிபரங்கள் |  செயற்திட்டங்கள் | வெளியீடுகள் | விவரணச்சித்திரங்கள | தொடுப்புகள் | எம்மைப்பற்றி |  தொடர்புகளுக்கு |

காசநோய்
காசநோய் என்றால் என்ன?
காசநோய் அறிகுறிகள்
பரவும் விதம்
காசநோய் வந்தால்.?
காசநோய் வராதிருக்க
காசநோயும் கர்ப்பிணிகளும்
காசநோயும் போசாக்கும்
டொட் என்றால்?
பதிவிறக்கம்
 சமூகத்தொண்டர் வழிகாட்டி
ஓடியோ பாடல்கள்(எம்பி3)
விவரணங்கள்(பவர்பொயின்ற்)
வெளியீடுகள்

காசத்தினை நிறுத்தும் உத்தி
-வைத்தியகலாநிதி சி.யமுனானந்தா

காசநலவிந்தை(கார்ட்டூன் கதை)
-வைத்தியகலாநிதி சி.யமுனானந்தா

  நடைமுறை காசநோய் கட்டுப்பாடு
-வைத்தியகலாநிதி சி.யமுனானந்தா

கட்டுரைகள் மற்றும் விவரணங்கள்
பத்திரிகையில் வெளிவந்தவை
பரிசு பெற்றவைகள்
கவிதைகள்
செய்திகள் நிகழ்வுகள்
போட்டிகளில் பரிசு பெற்றவர்கள்
நிழல்படங்கள்

 

 

 

 
காசநோயின் அறிகுறிகள்
  • தொடர்ச்சியாக மூன்று வாரங்களிற்கு மேலான இருமல்.
  • இரவு நேரக் காய்ச்சல்.
  • சளியுடன் இரத்தம் வெளியேறல்
  • உடல் நிறை குறைவடைதல்
  • உணவில் விரும்பமின்மை
  • இரவு நேரத்தில் வியர்த்தல்
  • களைப்பாகக் காணப்படல்
  • நிணநீர் கணுக்கள் வீங்குதல், நெஞ்சுவலி போன்ற நோயறிகுறிகளும் காணப்படும்.
 

காசநோயினால் பாதிக்கப்படும் அங்கங்கள்

நுரையீரல் - 80%
ஏனைய அங்கங்கள் - 20%
நுரையீரல் சுற்றுச்சவ்வு
கழுத்து நிணநீர்கணு
மூளை
இதயச்சுற்றுச்சவ்வு
சிறு நீரகம்,
என்பு ,தோல்
சூலகக்கான்,
கண், மார்பு,
குடல், விதை

காசநோய்க் கிருமி
பக்ரீரியா (
Mycobacterium tuberculosis) கலமென்சவ்வில் 200இற்கு மேற்பட்ட பிறபொருள் பதார்த்தங்களைக்கொண்டு உள்ளது. இதனாலேயே இதற்குத் தடுப்பு மருந்து கண்டுபிடித்தல் கடினமாக உள்ளது. நுணுக்குக் காட்டியில் கிருமிகள் மெல்லிய நீண்ட வளைவாகத் தனித்தனியே அல்லது கூட்டமாகக்காணப்படும் பக்ரீறியாவின் கலச்சுவர் அதிக கொழுப்பைக்கொண்டது. சாதாரண சாயமிடலால் கண்டறிய முடியாது. நுணுக்கு காட்டியில் செந்நிறமாக இருக்கும்.
 

காசநோய் உள்ளதா என்பதை சுயமதிப்பீடு செய்து கொள்வதற்கான வழிகாட்டி

இல
 
பண்பறி சுட்டிகள் புள்ளிகள்
1 3 கிழமைகளுக்கு மேல் தொடர்ச்சியான இருமல் 20
2 மாலை நேரக் காய்ச்சல் 20
3 உடல் நிறையிழப்பு 15
4 இருமும் போது இரத்தம் வெளியேறல் 10
5 உணவில் விருப்பமின்மை 10
6 உறவினர் ஒருவருக்கு காசநோய் இருந்தால் 05
7  நண்பர்களுக்கு காசநோய் இருந்தால் 05
8 சுவாசிப்பதில் சிரமம் 03
9 இரவில் வியர்த்தல் 03
10 நெஞ்சு நோவு 03
11 உடல் களைப்பு 03
12 சலரோக நோய் இருத்தல் 03
  மொத்தம் 100

பண்பறி சுட்டிகளின் மொத்தப் பெறுமதி 50 ற்கு மேல் இருந்தால் அருகிலுள்ள வைத்தியசாலையில் சளிப்பரிசோதனையை கட்டாயமாக செய்துகொள்ள வேண்டும்.

 

காப்புரிமை யாவும் வடஇலங்கை காசநோய் தடுப்பு சங்கத்திற்குரியது 2009-2013.   இணையத்தளவடிவமைப்பு மற்றும் சேவர் வசதி SPEED IT NET