முகப்புப்பக்கம் புள்ளிவிபரங்கள் |  செயற்திட்டங்கள் | வெளியீடுகள் | விவரணச்சித்திரங்கள | தொடுப்புகள் | எம்மைப்பற்றி |  தொடர்புகளுக்கு |

காசநோய்
காசநோய் என்றால் என்ன?
காசநோய் அறிகுறிகள்
பரவும் விதம்
காசநோய் வந்தால்.?
காசநோய் வராதிருக்க
காசநோயும் கர்ப்பிணிகளும்
காசநோயும் போசாக்கும்
டொட் என்றால்?
பதிவிறக்கம்
 சமூகத்தொண்டர் வழிகாட்டி
ஓடியோ பாடல்கள்(எம்பி3)
விவரணங்கள்(பவர்பொயின்ற்)
வெளியீடுகள்

காசத்தினை நிறுத்தும் உத்தி
-வைத்தியகலாநிதி சி.யமுனானந்தா

காசநலவிந்தை(கார்ட்டூன் கதை)
-வைத்தியகலாநிதி சி.யமுனானந்தா

  நடைமுறை காசநோய் கட்டுப்பாடு
-வைத்தியகலாநிதி சி.யமுனானந்தா

கட்டுரைகள் மற்றும் விவரணங்கள்
பத்திரிகையில் வெளிவந்தவை
பரிசு பெற்றவைகள்
கவிதைகள்
செய்திகள் நிகழ்வுகள்
போட்டிகளில் பரிசு பெற்றவர்கள்
நிழல்படங்கள்

 

 

 

 
காசநோய் - வரலாறு
 • உலகில் காசநோய்க்கிருமி பல ஆயிரம் ஆண்டுகளாக உயிர்வாழுகின்றது.

 • கி.மு 8000 ஆண்டுக்குரிய ஜேர்மனிய நாட்டு மனித என்புக்கூடுகளில் இக்கிருமி அவதானிக்கப்பட்டது.

 • கி.மு 2500 - கி.மு 1000 ஆண்டு எகிப்திய மம்மிகளிலும் இக்கிருமி காணப்பட்டது. இது காசநோய்க்கிருமியின் உலக காலநிலை மாற்றங்களுக்கும் தப்பி உயிர்வாழும் தன்மையைக் காட்டுகின்றது.

 • 1882ம் ஆண்டு பங்குனி மாதம் 24ம் நாள் றொபேட்கொச் என்பவரால் இந்நோய்க்கிருமி நுணுக்குக்காட்டியால் கண்டறியப்பட்டது.

 • தனிமைப்படுத்தும் சிகிச்சையும், சூரிய ஒளிச்சிகிச்சையும் (Sanitorium) உருவாக்கப்பட்டது.

 • 1944ம் ஆண்டு Streptomycin கண்டுபிடிக்கப்பட்டது.

உலக நாடுகளில் காசநோய்த் தாக்கம்

 • உலகில் 20 மில்லியன் மக்கள் காசநோயினால் பாதிக்கப்பட்ட வண்ணம் உள்ளனர். இதில் 10மில்லியன் மக்களிற்கு சளியில் கிருமி காணப்படுகின்றது.

 • உலகில் காசநோயாளிகளில் பெரும்பாலானோர் ஆசியாக் கண்டத்தில் உள்ளனர். AIDS நோயாளிகளுக்கு காசநோய்ப்பரம்பல் அதிகம் உள்ளதால் ஆபிரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலும் காசநோய் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது.

 • யுத்தத்தினால் சீர்குலைந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் MDR-TB பரம்பல் அதிகம் உள்ளது.

 • தென்கிழக்கு ஆசியாவில் காசநோய்த்தாக்கம் வங்களாதேசம், இந்தியா, பூட்டான், வடகொரியா, இந்தேனேசியா, மாலைதீவு, மியாமார், நேபாளம், இலங்கை, தாய்லாந்து, கிழக்கு தீமோர் ஆகிய நாடுகளிலுள்ளது.

இலங்கையில் காசநோய்

 • இலங்கையில் ஆண்டுதோறும் ஒரு இலட்சம் மக்களில் 54 பேர் காசநோயால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 25 பேர் சளியில் கிருமி உள்ள காசநோயாளிகள்.

 • ஆண்டுதோறும் 9000 காசநோளாளர் சிகிச்சை பெறுகின்றனர். இதில் 4500 பேர் சளியில் கிருமி உள்ள காசநோயாளிகள்.

 • இலங்கையில் காசநோயாளிகள் அதிக அளவில் நெருக்கமான நகரங்களில் உள்ளனர். கிராமப்புறங்களில் சளிப்பரிசோதனை செய்யும் வசதிகள் குறைவு என்பதால் காசநோயாளர் இனம் காணப்படல் குறைவாக உள்ளது.

காசநோய் என்றால் என்ன?

 • மைக்கோ பக்ரீரியம் (Mycobacterium tuberculosis ) பக்ரீரியாவினால் ஏற்படும் தொற்று நோய்.

 • இது ஒரு பரம்பரை நோயல்ல.

 • Tuberculosis (TB) எனப்படும் இந் நோய் காற்றின் மூலம் பரவுகின்றது.

 • சுவாசத்தின் மூலம் தொற்றும் இந் நோய்க்கிருமி பெரும்பாலும் சுவாசப்பையில் நோயை ஏற்படுத்துகிறது.

 • உலகில் 1/3 பங்கினர் காசநோய்க்கிருமித்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

 • காசநோய்க்கிருமித் தொற்றுக்குள்ளான அனைவருக்கும் காசநோய் ஏற்படுவதில்லை.

 • ஒருவரது நோயெதிர்ப்பு சக்தி குறைவடையும் சந்தர்ப்பத்திலேயே அவருக்கு காசநோய் ஏற்படுகிறது.

 

காப்புரிமை யாவும் வடஇலங்கை காசநோய் தடுப்பு சங்கத்திற்குரியது 2009-2013.   இணையத்தளவடிவமைப்பு மற்றும் சேவர் வசதி SPEED IT NET