முகப்புப்பக்கம் புள்ளிவிபரங்கள் |  செயற்திட்டங்கள் | வெளியீடுகள் | விவரணச்சித்திரங்கள | தொடுப்புகள் | எம்மைப்பற்றி |  தொடர்புகளுக்கு |

காசநோய்
காசநோய் என்றால் என்ன?
காசநோய் அறிகுறிகள்
பரவும் விதம்
காசநோய் வந்தால்.?
காசநோய் வராதிருக்க
காசநோயும் கர்ப்பிணிகளும்
காசநோயும் போசாக்கும்
டொட் என்றால்?
பதிவிறக்கம்
 சமூகத்தொண்டர் வழிகாட்டி
ஓடியோ பாடல்கள்(எம்பி3)
விவரணங்கள்(பவர்பொயின்ற்)
வெளியீடுகள்

காசத்தினை நிறுத்தும் உத்தி
-வைத்தியகலாநிதி சி.யமுனானந்தா

காசநலவிந்தை(கார்ட்டூன் கதை)
-வைத்தியகலாநிதி சி.யமுனானந்தா

  நடைமுறை காசநோய் கட்டுப்பாடு
-வைத்தியகலாநிதி சி.யமுனானந்தா

கட்டுரைகள் மற்றும் விவரணங்கள்
பத்திரிகையில் வெளிவந்தவை
பரிசு பெற்றவைகள்
கவிதைகள்
செய்திகள் நிகழ்வுகள்
போட்டிகளில் பரிசு பெற்றவர்கள்
நிழல்படங்கள்

 

 

 

  உலக காசநோய் தினம் 2009 | கட்டுரை
 
உலக காசநோய் தினம் 2009 | கட்டுரைப்போட்டி | மேற்பிரிவு 1 ம் இடம்
ரூபினி. சுந்தரலிங்கம் (2011 உயிரியல் பிரிவு) வேம்படி மகளிர் கல்லூரி

காசநோயினைக் கட்டப்படுத்துவது எப்படி? இன்று நாம் 21 ஆம் நுற்றாண்டில் வாழ்;ந்து கொண்டிருக்கிறோம். இயந்திர யுகமும் அவசர கதியும் வாழ்வாகிப்போய்விட்டன. மண்ணின் மைந்தர் நாம் விண் வெளியில் பயணித்து தண்மதியில் குதித்துவிட்டோம். தலை நிமிர்ந்து நின்று கொண்டோம். பொறியியல், மருத்தவம் என எதிலும் வெற்றிக் கொடி நாட்டியபடி மானுடம் பயணம் செய்கின்றது. தொடக்கமும் முடிவும் இல்லாத அநாதியாய் அகன்று விரிந்திருக்கின்ற இப்பிரபஞ்சத்திலே தன்னுணர்வு இல்லாத சிற்றுயிர்கள் முதல் தன்னை உணரத்துடிக்கின்ற மனிதன் இவ்வாறான இயல்பான செயற்பாடகளிலிருந் வேறுபட்டும் பல்வேறு படிப்பினைகளைத் தாண்டுவதற்கும் அடித்தளமே விஞ்ஞானம் எனலாம். விஞ்ஞானத்தின் விந்தையால் உலகளாவிய ரீதியில் மிகவேகமாகப் பரவிய சார்ஸ் நோயைப் போன்றே காசமும் இலங்கையில் மிகவேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்திலே இந்நோயின் பரவல் முன்னைய காலங்களைவிட தற்போது மிகவும் அதிகமாக உள்ளது எனலாம்.

காசநோயானது Mycohacterium tuberculosis  எனும் பக்ரீரியாவாலே ஏற்படுகிறது. இந்நோயானது சந்ததி சந்ததி யாகத் தொற்றாத போதும் அதிகமாக நுரையீரல்களையே தாக்குகின்றது. ஆனாலும் மூளை, சிறுநீரகம், விதை, வயிற்றுக்குழி, நிணநீர் முடிச்சுக்கள், மார்பு, குதம் போன்ற இடங்களிலும் இதன் காசநோய்க்கிருமியானது சிரிக்கும் போதும், கதைக்கும் போதும,; தும்மும் போதும், இருமும் போதும் காற்றில் கலந்து விடப்படுகின்றது. இவ்வாறு காற்றில் கலந்து விடப்பட்ட கிருமிகள்சுவாசத்தின் மூலமாக சுகதேகியின் நுரையீரலை அடைகின்றன. அங்கு பல்கிப் பெருகி நோயை உண்டு பண்ணும். ஆனாலும் இந் நோய்க்கிருமியானது நேரடிச்சூரிய ஒளியினால் அழிவுறுகிறது. அதனால் நெருக்கமான காற்றோட்டமற்ற இடங்களில் வாழ்வோருக்கு பாதிப்பு அதிகமாகும். மாலைவேளைகளில் மெல்லிய காய்ச்சல் நிலவுதல், மூன்று கிழமைகளுக்கு மேலாகத் தொடர்கின்ற இருமல்,சளியுடன் இரத்தம் வெளியேறல், உணவில் விருப்பமின்மை, உடல் மெலிதல், நிறை இழப்பு ஏற்படுதல் மார்பில் நோ ஏற்படுதல், போன்ற பல் குணங்குறிகள் காசநோய்த் தொற்றினால் ஏற்படுகிறது. காற்றினால் சுவாசத்தின் மூலம் உள்ளெடுக்கப்படும் கிருமிகளானவை எமது உடலின் தற்பாதுகாப்பு பொறிமுறையினால் அதாவது குருதியில் உள்ள தின் குழியங்கள் எனும் கலங்களால் சிறைப்பிடிக்கப்படும். நோயாளி நலிவானவராயின் அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவராயின் இலகுவாக நோய்த் தாக்கத்துக்குள்ளாகலாம். சிறைப்பிடிக்கப்பட்ட கிருமிகள் சிறையினின்றும் உடைபட்டு குருதியோடு கலந்து உடலின் பிற பாகங்களை அடையலாம். சிறைப்பிடிக்கப்பட்ட நிலையிலும் பல வருட காலம் நோயை ஏற்படுத்தாது விடலாம்.

சுகதேகியான ஒருவருக்கு இந்நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் இருமுகின்ற போது நுரையீரலிலுள்ள பக்ரீரியாக்கள் சளியுடன் வெளியேறி அருகில் இருப்பவர்கள் உட்சுவாசிக்கும் போது இப் பக்ரீரியாக்கள் சுகதேகியின் உடலை அடைந்து நோய் உண்டாகின்றது. அத்துடன் தனிநபர் சுகாதாரம் அல்லது சீர்கேடான வீட்டுச்சுகாதாரம் என்பனவாலும் இந்நோய் பரவலாம். அத்துடன் கண்ட இடங்களில் நோயாளி கிருமி சளியை வாயில் எடுத்து எல்லா இடங்களிலும் துப்புதல். இதனால் காசநோய்க்கிருமிகள் நிலத்தில் இருக்கும் எச்சில் காய்ந்த பின்பும் பல மணிநேரம் உயிருடன் இருந்துகாற்று து}சியுடன் இவை மேலே சென்று சுவாசிப்பவர்களின் நாசிக்கூடாக நுரையீரலுக்கும் அங்கிருந்து குருதி, நிணநீர், சளி போன்றவற்றினு}டாக உடலில் மற்றைய பகுதிகளுக்கும் செல்கிறது. அத்துடன் நோயுள்ளவரின் குடும்ப அங்கத்தவர்கள் கிராமப்புறங்கள் சேரிப்புறங்களில் காற்றோட்டம் வெளிச்ச வசதி குறைந்த வீடுகளில் வசிக்கும் மக்களிற்கும் இந்நோய்த் தொற்று அதிகளவில் ஏற்படுகிறது. இந்நோய்த் தொற்றஜனைச் சளி மாதிரியில் உள்ள கிருமிகளை விசேட வளர்ப்பூடகங்களில் வைத்து வளர்த்து அதன்பின்னர் அவதானிக்கலாம். அத்துடன் வீரியங்குறைக்கப்பட்ட கிருமிப்புரதத்தை ஊசிமூலம் ஏற்றி நோயாளியின் காசநோய்க் கிருமிக்கெதிரான நோய் எதிர்ப்பு சக்தியினை அறிந்து கொள்ளலின் மூலம் காசநோயின் நிச்சயத்தன்மையை உறுதிப்படுத்தலாம். ஆயினும் இது நிச்சயத்தன்மை குறைந்த முறையாகும். காசநோயால் உறுதிப்படுத்தப்பட்ட ஒருவரின் உடல் பலவினம் அடைவதால் அவரின் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்து விடும். இதன் மூலம் சலரோகம், மலேரியா, எயிட்ஸ் போன்ற நோய்கள் ஏற்பட்டு தாக்கத்தை ஏற்படுத்தும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் எமது செயற்பாட்டைக் காட்டிலும் வைத்தியசாலையில் செய்யப்படும் சிகிச்சை வித்தியாசமானது. அதாவது இச்சிகிச்சை முற்றிலும் இலவசமானது. தொடர்ச்சியாக 6 மாதங்களுக்கு கிசைகளை உள்ளெடுப்பதன் மூலம் காசநோயை முற்றாகக் குணப்படுத்த முடியும். அத்துடன் உரிய சிகிச்சை தொடங்கி சில வாரங்களில் நோயாளி மற்றவருக்கு தொற்றும் ஆற்றலை இழந்து விடுவார். அதனால் பின்னர் அன்றாட வேலையில் ஈடுபடலாம். இந் நோயின் சிகிச்சையின் நோக்கங்களாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

  • நோயாளிகளைக் காசநோயிலிருந்து பாகாத்தல்.

  • இறப்பைத் தவிர்த்தலும் பிந்திய விளைவுகளை தவிர்த்தலும்

  • மீளவும் காசநோய் ஏற்படுவதைத் தவிர்த்தல்.

  • காசநோய் சமூகத்தில் பரவுவதைத் தவிர்த்தல்.

இவ்வாறான சிகிச்சைகளைக் காட்டிலும் தற்போது நடைமுறையில் நவீன சிகிச்சைமுறை காணப்படுகிறது. வகை 1 முறை சிகிச்சை முறையின் போது 4 வகை குளிசை ஒன்றிணைக்கப்பட்ட வில்லை ஒரு நாளுக்கு ஒன்று வீதம் நான்கு மாதங்களுக்கு வழங்கப்படும். அவ்வகை நான்கு வகை குளிசைகளின் பெயர்கள் முறையே றிபாம்பிசின், ஜசோநியாசிட், பைறசினைமட் எதன்பியூட்டோல் என்பனவாகும். வகை 2 முறை சிகிச்சையின் போது வகை 1இன் ஆரம்ப அவத்தையின் 4 குளிசைகளுடன் மேலதிகமாக ஸ்ரெப்ரோனமசின் எனப்படும் ஊசியும் எற்றப்படும். அடுத்த இரு மாதங்களிற்கும் வகை 1இன் தொடரவத்தை குளிசைகளோடு எதன்பியூட்டோல் எனப்படும் மேலதிக வில்லை வழங்கப்படும். எனினும் சரியான அளவுகளில் சரியான காலத்துக்கு குளிசைகளை உள்ளெடுக்காத நோயாளிகளில் நோய்க்கிருமியானது மருந்துகளுக்குத் தப்பிப் பிழைக்கும் ஆற்றலை வளர்த்துக்கொள்ளும்.பின்னர் வழமையான மருந்துகளால் இதனைக் கொல்ல முடியாதிருக்கும். எனவே தான் காசநோயினை சிறிதளவேனும் குணப்படுத்த ஒழுங்கான சிகிச்சை முறை அவசியமாகின்றது. கொடுக்கப்படும் சிகிச்சையை இடைநடுவே விட்டவருக்கு புதிய மேலதிக சிகிச்சையானது நபருக்கும், குடும்பத்தார் மற்றும் சுகாதார உத்தியோகத்தர்களுக்கும் பொருளாதார உளரீதியான சுமையாய் அமையும். மருந்துகளை சரிவர பாவிக்காதவர்களில் 50வீதமானோர் 5 வருடங்களுக்கு இறந்து விடுவார்.

காசநோயாளியின் அரவணைப்பில் உள்ள குழந்தை மற்றும் போசணை குறைந்த குழந்தைகளில் காசநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும். இதனால் பிள்ளையில் காசநோய் ஏற்படுவதைத் தடுக்க பிள்ளை பிறந்து 24 மணித்தியாலத்துக்குள் பி.சி.ஜி காசநோய்த் தடுப்பூசி போடுதல் வேண்டும். வீட்டில் பிறந்த குழந்தையாயின் மருத்துவ மாதுவை உடனடியாக நாடி ஊசி ஏற்றுதல் வேண்டும்.இடது கையில் 6 மாதங்களின் பின்பும் தழும்பு ஏற்படாத குழந்தைகளுக்கு 5 வயது வரை மீள ஊசி ஏற்றலாம்.இத்தகைய காசநோய் ஊசி முற்றிலும் இலவசமானதாகும். இவ்வாறான சிகிச்சைகளை மேற்கொண்டாலும் நோயினைத் தவிர்ப்பதற்கு நாமும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். நோயின் அறிகுறிகளை ஆரம்பத்தில் கண்டவுடன் மார்புநோய் சிகிச்சை நிலையத்துக்கு சளியைப் பரிசோதித்தல் வேண்டும். காசநோய் வளி மூலமாகப் பரவுமாகையால்தும்மும் போதும் இருமும் போதும் பிரத்யேகமான கைக்குட்டை துவாய்களைப் பாவிக்க வேண்டும்.

நோயாளியினால் துப்பப்படும் சளி வெற்றுத்தகரப்பேணியில் சேகரித்து குழியில் புதைத்தல் எரித்துவிடல் மிக முக்கியமானதாகும். அத்துடன் நோயாளி பாவித்த கைக்குட்டைகள், உடைகள் என்பவற்றை 100 பாகை சி யில் 5 நிமிடம் அவித்தல் வேண்டும்.கிராமப்புறங்களில் காற்றோட்டம் வெளிச்சவசதி, உள்ள வீடுகளில் குடியேற்றங்களை அமைத்தல் போன்றன காசநோய் பரவுவதைத் தடுக்கக் கூடிய வழிகள் ஆகும்.

மேற்கூறப்பட்டதன் அடிப்படையில் நோயாளியின் பொறுப்புணர்ச்சியினால் அவரைச் சார்ந்தவர்களுக்கும், சமூகத்துக்கும் காசநோய் பரவுவதைத் தடுக்க முடியும். எனவே நவீனயுக உலகிலே காசம் அற்ற சுவாசத்தை மேற்கொள்ள அனைவரினதும் அர்ப்பணிப்பு அவசியமானதொன்றாகும். மேலும் சிறந்த ஒரு தலைமைவகித்தலின் கீழ்நடவடிக்கைகளை மேற்கொள்வோமானால் சமூகத்தில் காசநோயினைக் குணப்படுத்துவது இயலும் என்பது திண்ணம்.
 

காப்புரிமை யாவும் வடஇலங்கை காசநோய் தடுப்பு சங்கத்திற்குரியது 2009-2013.   இணையத்தளவடிவமைப்பு மற்றும் சேவர் வசதி SPEED IT NET