முகப்புப்பக்கம் புள்ளிவிபரங்கள் |  செயற்திட்டங்கள் | வெளியீடுகள் | விவரணச்சித்திரங்கள | தொடுப்புகள் | எம்மைப்பற்றி |  தொடர்புகளுக்கு |

காசநோய்
காசநோய் என்றால் என்ன?
காசநோய் அறிகுறிகள்
பரவும் விதம்
காசநோய் வந்தால்.?
காசநோய் வராதிருக்க
காசநோயும் கர்ப்பிணிகளும்
காசநோயும் போசாக்கும்
டொட் என்றால்?
பதிவிறக்கம்
 சமூகத்தொண்டர் வழிகாட்டி
ஓடியோ பாடல்கள்(எம்பி3)
விவரணங்கள்(பவர்பொயின்ற்)
வெளியீடுகள்

காசத்தினை நிறுத்தும் உத்தி
-வைத்தியகலாநிதி சி.யமுனானந்தா

காசநலவிந்தை(கார்ட்டூன் கதை)
-வைத்தியகலாநிதி சி.யமுனானந்தா

  நடைமுறை காசநோய் கட்டுப்பாடு
-வைத்தியகலாநிதி சி.யமுனானந்தா

கட்டுரைகள் மற்றும் விவரணங்கள்
பத்திரிகையில் வெளிவந்தவை
பரிசு பெற்றவைகள்
கவிதைகள்
செய்திகள் நிகழ்வுகள்
போட்டிகளில் பரிசு பெற்றவர்கள்
நிழல்படங்கள்

 

 

 

  உலக காசநோய் தினம் 2009 | கட்டுரை
 
உலக காசநோய் தினம் 2009 | கட்டுரைப்போட்டி | மத்திய பிரிவு 1 ம் இடம்
செல்வி. சிந்துஜா. இராஜேஸ்வரன்-சுண்டுக்குளி மகளிர் கல்லூரி தரம் 10 A

காசநோயினைக் கட்டுப்படுத்துவது எப்படி?
காசநோய் என்பது பக்ரீரியா நுண்கிருமிகளினால் ஏற்படும் ஒரு தொற்றுநோயாகும். பொதுவாக இந்நோயானது பொதுவாக சுவாசப்பையைத் தாக்குகின்றது. இதைவிட உடலின் அனைத்து உறுப்புக்களும் இதனுடைய தாக்கத்துக்கு உள்ளாகின்றன. காசநோயின் பாதிப்பு நோய் எதிர்ப்புச்சக்தி குறைவாக உள்ளவர்களில் அதிகமாகக் காணப்படுகின்றது.
உதாரணமாக:-

நீரிழிவு நோயாளிகள்
HIVதொற்றுடையவர்கள்
மதுபானம் அருந்துவோர்கள்
சிகரெட் பாவனையாளர்கள்
போசாக்கின்மையால் பாதிக்கப்படுவோர்கள்
சிறைக்கைதிகள்.

காசநோய் பரவும் முறையானது, சுவாசப்பையில் காசநோய் இருப்பது மற்றவர்களுக்கு ஆபத்தானதாகும். ஏனெனில் அது ஒருவரிலிருந்து மற்றவருக்கு இலகுவாகத் தொற்றுகின்றது. காசநோயாளியான ஒருவர் மூக்குப்பகுதியை மூடாது இருமும் போதும் தும்மும் போதும் காசநோய்க்கிருமிகள் காற்றில் விசிறப்படும். அக்காற்றை இன்னொருவர் சுவாசிக்கும் போது நோய்க்கிருமிகள் அவரின் சுவாசப்பைக்குள் சென்றுவிடுகின்றன. குடும்ப அங்கத்தவர்களுக்கும் இக்கிருமித் தொற்று ஏற்பட இலகுவாக அமைகிறது. காற்றோட்டவசதி குறைவான வீட்டில் பலர் வசிக்கும்போது தொற்றும் தன்மை அதிகமாகின்றது. போதியளவு சுத்தமான காற்று இல்லாதவிடத்தும் அவருக்க காசநோய் ஏற்படக்கூடும். இதற்கான அறிகுறிகளாவன


மூன்று கிழமைக்கு மேல் இருமல் காணப்படல்.
சளியுடன் இரத்தம் வெளியேறல்
இரவில் வியர்த்தலுடனான காய்ச்சல்
உடல் நிறை குறைவடைதல்
களைப்படைதல்
மார்பில் வலி ஏற்படல்
நிணநீர்க்கணுக்களில் ஏற்படும் வீக்கம்
உணவில் விருப்பமின்மை

இக் காசநோயினை நிர்ணயம் செய்வதற்காகவே பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

 நுரையீரல் காசநோயினைக் கண்டறிவதற்காக நுணுக்குக் காட்டியின் உதவியுடன் கண்டறிவதற்கு மூன்றுமுறை சளி மாதிரிப்பரிசோதனை செய்தல் மிகச்சிறந்த முறையாகும்.
 காசநோய்க் குணங்குறிகள்
 X- ray கதிர்ப்படம் (நெஞ்சுப்பகுதி)
 மாண்டுப்பரிசோதனை (Mantoux)
 தொற்று ஏற்பட்டவுடன் ஏற்பட்டவர்களுடனான தொடர்பகள் உள்ளதற்கான சான்றுகள் (Contact History)
 Biopsy பரிசோதனை
 CT ஸ்கான் பரிசோதனை
 குருதி, சிறுநீர்ப் பரிசோதனை

காசநோய்ச் சிகிச்சை முறைக்காக இவ் நோயிற்கு உள்ளானவர்களை இனம் கண்டு கொள்ளவும், சரியான நேரத்தில், சரியான இடைவெளியில், சரியான அளவில், காசநோய் எதிர்ப்பு மருந்துகளை சுகாதார உத்தியோகத்தர் நேரடி அவதானிப்பின் கீழ் நோயாளியால் உள்ளெடுக்கப்படுமிடத்து இந் நோயின் தாக்கத்திலிருந்து முற்றாக குணமடையமுடியும். மிகக் கடுமையான காசநோயாளிகள் மட்டும் வைத்தியசாலையிற் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார்கள். காசநோய் பரவுவதைத் தடுக்க நோயாளியைத் தனிமைப்படுத்தும் பொருட்டு வைத்தியசாலையில் அனுமதிப்பது அவசியமானதல்ல.

இந்நோயிலிருந்து குணமடைவதற்கு மருந்து உட்கொள்ள வேண்டிய கால எல்லை உங்களது உடலில் காசநோய் ஏற்பட்டள்ள இடத்தைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும்.
உங்களது சுவாசப்பையில் காசநோய் ஏற்பட்டிருந்தால் நோய்க்கிருமிகளை அழிப்பதற்காக குறைந்தது 6 மாதம் தினமும் மருந்து உட்கொள்ள வேண்டும். அதாவது முதல் 2 மாதங்களும் 4 வகையான மருந்துகளையும் அடுத்த 4 மாதங்களும் 2 வகையான மருந்துகளையும் உட்கொள்ள வேண்டும்.

உங்களுக்கு ஏற்பட்டுள்ளது சுவாசப்பை தவிர்ந்த ஏனைய இடத்தில் காசநோய் எனில் அதன்படி மருந்து உட்கொள்ளும் கால எல்லை உங்களது வைத்தியரால் உங்களுக்கு அறியத்தரப்படும்.
மருந்து உட்கொள்ள ஆரம்பித்த ஓர் மாத கால அளவில் உங்களுக்கு இருந்த நோய் அறிகுறிகள் படிப்படியாகக் குறைவடைவதுடன் சுகமடைவதையும் உணரமுடியும். அத்துடன் உங்களிடமிருந்து மற்றவர்களுக்கு நோய் தொற்றுவதும் நின்றுவிடும். எனினும் இன்னமும் நீங்கள் பூரணமாகக் குணமாகவில்லையாயின் உங்களது உடலிலுள்ள காசநோய் ஏற்படுத்தும் கிரமி முற்றாக அழிக்கப்பட வேண்டும். அதனால் வைத்தியரால் தீர்மானிக்கும் காலம், மருந்து கட்டாயம் ஒவ்வொரு நாளும் தவறாது குடிப்பது கட்டாயமானது. நீங்கள் தினமும் மருந்து உட்கொள்ளாதுவிட்டால் பின்வரும் ஆபத்தான நிலைகள் ஏற்படும்.

நோய் குணமாகாது/ குணமடைவது கடினம்.
நோயைப்பரப்புவீர்கள்

மருந்து உட்கொள்வது இடையில் கைவிடப்படும் போது வைத்தியரால் பின்பற்றக் கொடுக்கப்படும். நடவடிக்கைகளாவன.


மீண்டும் முதலிலிருந்து சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும்.
உட்கொள்ள வேண்டிய மருந்துகளின் எண்ணிக்கை கூடும்.
சில மருந்துகளை ஊசி மூலம் ஏற்ற வேண்டி ஏற்படும்.

காசநோயிலிருந்து குணமடைவதற்கு அவசியமானது: ஒழுங்காக ஒவ்வொருநாளும் 6 மாதங்களுக்கு மரந்து உட்கொள்வதுதான். இதற்காக வைத்தியசாலையில் தங்கியிருப்பது அவசியமில்லை. அப்படியானால் இது தவறாது நடைபெறுவதை உறுதிப்படுத்த நீங்கள் தினமும் சுகாதார சேவையாளர் முன்னிலையில் மருந்து உட்கொள்ளல் வேண்டும்.மருந்து உட்கொள்வதற்காக உங்கள் அன்றாட வேலைக்கேற்ப தினமும் உங்களால் வருகை தரக்கூடிய வைத்தியசாலை ஃ சுகாதார நிலையத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்காக மார்பு நோய் சிகிச்சை நிலைய வைத்தியர் உங்களுக்கு உதவுவார்.அவ் வைத்தியசாலை / சுகாதார நிலையத்துக்கு உங்களுக்குரிய மருந்துகள் மார்பு நோய் சிகிச்சை நிலையத்தால் இடைவிடாது அனுப்பிவைக்கப்படும்.

உங்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாங்க வைத்தியசாலை /சுகாதார நிலையத்துக்குச் சென்று சுகாதார சேவையாளர் ஒருவர் முன்னிலையில் மருந்து உட்கொண்ட பின் வழமை போல் உங்களது அன்றாட வேலையில் ஈடுபட முடியும். இவ்வாறு சுகாதார சேவையாளர் முன்னிலையில் மருந்து குடிப்பது நேரடி அவதானிப்புச் சிகிச்சை முறை என்றும் ஆங்கிலத்தில் (DOTS) எனப்படும்.மருந்து உட்கொள்ளும் காலத்தில் பின்வரும் பக்க விளைவுகள் ஒன்றோ அல்லது சிலவோ ஏற்பட்டால் உங்களது வைத்தியரிடம் தெரிவிக்க வேண்டும்.

ஓங்காளம் அல்லது வாந்தி
கண்கள், முகம் மஞ்சள் நிறம்
கொப்பளங்களுடன் சரும எரிச்சல்
பார்வைத் தெளிவு குறைவடைதல்
மூட்டுக்களில் வீக்கம்.

மருந்து உட்கொள்ளும் காலம் சூரை மீன் போன்ற சிவப்பு மீன்களையும் சதையுள்ள மீன்களையும் கருவாடுகளையும் உணவில் சேர்ப்பதைத் தவிர்த்தல்.

சுகமடைதலில் ஏற்படும் முன்னேற்றத்தைச் சான்றுபடுத்தவதற்காக இக்காலத்தில் சளிப்படலப் பரிசோதனை செய்து கொள்வது முக்கியம். இது சம்மந்தமாக தேவையான அறிவுறுத்தல்கள் மார்புநோய் சிகிச்சை நிலையத்தில் தரப்படும்.

இவ்வாறாக சிகிச்சை முறைகளின் நோக்கம்.

நோயாளியை இனம் காணல்
நோயிலிருந்து காப்பாற்றுதல்
இந் நோயினால் ஏற்படும் இறப்புக்களையும் பின்விளைவுகளையும் தடுத்தல்.
சமூகத்தில் இந்நோய் பரவுதலைத் தடுத்தல்
காசநோய் மீள் வருவதைத் தவிர்த்தல்
காசநோய்க்கிருமிகள், காசநோய் எதிர்ப்பு, மருந்துகளுக்கு எதிர்ப்புத்தன்மை பெறுவதைத் தவிர்த்தல்.
நோய் பற்றிய அறிவினை ஏற்படுத்தி எதிர்பாலத்தில் இந்நோயை முற்றாக ஒழித்தல்

நோய் பரவுதலைத் தடுப்பதற்கு பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்றுவதல் மிக அவசியானதாகும்.

 ஒழுங்காக ஒவ்வொரு நாளும் 6 மாதங்களுக்கு மருந்து உட்கொள்ள வேண்டும்.
 வெளிவரும் சளியை ஒரு பாத்திரத்தில் சேகரித்து புதைத்துவிடல் ஃ எரித்துவிடல்.
 இருமும் போதும் தும்மும் போதும் மூக்கை மூட கைக்குட்டை பாவித்தல்.
 நோயாளியை ஆரம்பத்திலே இனம் காணவேண்டும்.
 பூரண சிகிச்சை அளிக்க வேண்டும்.
 இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தைக் காச நோய்ப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
 நல்ல ஒளியும் காற்றோட்டமும் உள்ள இடத்தில் வசித்தல் வேண்டும்.
 நல்ல போசாக்குள்;ள உணவை உட்கொண்டு நோய் எதிர்ப்புத்தன்மையைப் பேணுதல்.
 மக்களிடம் காசநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தல்.
 யாழ் மக்களாயின் காசநோய் பற்றிய மருத்துவ ஆலோசனையை போதனா வைத்தியசாலையிலும், யாழ் பண்ணை வைத்தியசாலையிலும் பெற்றுக் கொள்ளலாம்.
 குழந்தைகளுக்கு பிறந்து 24 மணித்தியாலத்துக்குள் சுகதேகியின் பி.சி.ஜி எனப்படும் தடுப்பூசி மருந்தை போட்டுக் கொள்ள வேண்டும்.

காசநோய் மருந்துகளை உட்கொள்ளும் போது கவனிக்க வேண்டியவை

ஓங்காளம் ,உணவில் விருப்பமின்மை, வயிற்றுநோய், செம்மஞ்சள் / சிவப்பு நிற சிறுநீர் வெளியேறல். போன்ற குணங்குறிகள் பற்றி கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியமில்லை.
மூட்டுவலி, பாதத்தில் எரிவுணர்வு போன்ற குணங்குறிகள் காணப்படுமிடத்து நோயாளி சுகாதார நிலையத்தை நாடவேண்டும்.
தோலில் சொறி, எரிச்சல், தோல் / கண்கள் மஞ்சள் நிறமாதல். அடிக்கடி வாந்தி ஏற்படல். காதுகேளாமை, தலைச்சுற்று, கண்பார்வை குறைவடைதல் போன்ற குணங்குறிகள் காணப்படுமிடத்து சிகிச்சை இடை நிறுத்தி சுகாதார வள நிலையத்தை நாட வேண்டும்.
மேலும் சில விசேட அறிவுரைகளாவன
 நீங்கள் பாலு}ட்டும் தாnனில், மருந்து உட்கொள்ளும் காலத்திலும்இடைவிடாது குழந்தைக்கு பாலு}ட்ட வேண்டும்.
 நீங்கள் குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரைகளைப் பாவிப்பதாக இருந்தால் அது பற்றி வைத்திய ஆலோசனையைப் பெற்று பொருந்த நடக்க வேண்டும்.
 உங்களுடன் நெருங்கிப் பழகியவர்களை வைத்திய ஆலோசனைப்படி நடத்தவேண்டும்.
 காசநோய்க்கு நாளொன்றுக்குத் தேவையான சைவ, அசைவ உணவுகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்.

அரசிடமிருந்து கிடைக்கும் அனுசரணைகள்

தொழில் செய்வோர் மருத்தவச் சான்றிதழ் பெறமுடியும்.
மருத்துவக்குழு முன் பிரசன்னமாகி அறிக்கை பெற்றுக் கொள்ள முடியும்.
வறுமை நிலையிலுள்ள நோயாளிகள் நிதியுதவியைப் பெறமுடியும்.
விசேட விடுமுறைக்கான அனுமதி பெற்றுக் கொள்ள முடியும்.
மேற்குறித்த தேவைகள் தொடர்பாக உங்களது மார்பு நோய் சிகிச்சை நிலைய வைத்தியரிடம் அறிந்து கொள்ளவும். (சிகிச்சை அட்டையை கவனமாக வைத்திருப்பது உங்களது கடமையாகும்).

 

காப்புரிமை யாவும் வடஇலங்கை காசநோய் தடுப்பு சங்கத்திற்குரியது 2009-2013.   இணையத்தளவடிவமைப்பு மற்றும் சேவர் வசதி SPEED IT NET